பிடபிள்யூஎஃப் உலக டூர் பைனல்ஸ் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் உலக டூர் பைனல்ஸ் பாட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிச் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் அகான யமகுச்சியை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து கடுமையாக போராடி 21-15, 15-21, 21-19 என்ற செட் கணக்கில் அகானே யமகுச்சியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் இறுதிச் சுற்றில் சிந்து, கொரியாவின் அன் சேயாங்கை எதிர்கொள்கிறார். அன் சேயாங் அரை இறுதிச் சுற்றில் 25-23, 21-17 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் சோச்சுவோங்கை வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago