நவம்பர் மாதத்தில் - உற்பத்தித் துறை புதிய உச்சம் :

By செய்திப்பிரிவு

கரோனா முதல் அலையின்போது கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் இந்திய தொழில் துறை கடும் நெருக்கடிக்கு உள்ளானது. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து தொழில்செயல்பாடுகள் மீளத் தொடங்கின.

இந்நிலையில், கரோனா இரண்டாம் அலை தொழில் துறையை மீண்டும் முடக்கத்துக்குத் தள்ளியது. இரண்டாம் அலை தீவிரம்குறைந்ததும் தொழில் துறைவேகமாக மீளத் தொடங்கியது. இந்நிலையில் ஒன்பது மாதத்துக்குப் பிறகு இந்திய உற்பத்தித் துறையின் உற்பத்தி வளர்ச்சி நவம்பர் மாதத்தில் உச்சத்தைத் தொட்டுள்ளதாக ஐஹெச்எஸ் மார்கிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் 55.9 ஆக இருந்த கொள்முதல் மேலாளர்கள் தொடர்பான குறியீடு (பிஎம்ஐ)நவம்பர் மாதத்தில் 57.6 ஆகஉயர்ந்துள்ளது. பிஎம்ஐ அதிகரிப் பானது உற்பத்தி அதிகரிப்பதற்கான அறிகுறி ஆகும். உள்நாட்டுச்சந்தையில் உருவான தேவையின் காரணமாகவே உற்பத்தி அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொள்முதல் தொடர்பானவேலை வாய்ப்புகளும் அதிகரித்து இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்