ஜம்மு-காஷ்மீருக்கு வரும் - சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு :

By செய்திப்பிரிவு

ஜம்மு-காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. காஷ்மீருக்கு கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 1.27 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் சுற்றுலாத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “2020-ம் ஆண்டு நவம்பரில் 6,327 சுற்றுலாப் பயணிகளும், 2019-ல் 12,086 பயணிகளும், 2018-ல் 33,720 பயணிகளும், 2017-ல்1.12 லட்சம் பேரும், 2016-ல் 23,569 பயணிகளும், 2015-ல் 64,778 பயணிகளும் ஜம்மு-காஷ்மீருக்கு வந்திருந்தனர்.

தற்போது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நவம்பரில் மட்டும் 1.27 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர்.

காஷ்மீரில் பொதுமக்கள் மீது கடந்த அக்டோபரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக்காக ஜம்மு-காஷ்மீரின் முக்கிய இடங்களில் சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் ஆகிய துணை ராணுவப் படையினர், காஷ்மீர் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது" என்று தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்