சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) நவம்பர் மாதத்தில் ரூ.1,31,526 கோடி வசூலாகி உள்ளது.
இறக்குமதி பொருட்கள் மீதானசுங்க வரி வசூல் 43% அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி வசூல் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் சூழலில்இப்போது வசூலாகியுள்ள தொகைஎதிர்பார்த்ததைவிட குறைவு என்றுஇக்ரா நிறுவன பொருளாதார நிபுணர் அதிதி நாயர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரலில் ஒட்டுமொத்த மாக வசூலான ஜிஎஸ்டி தொகை ரூ.1,41,384 கோடி. ஆனால் திருத்திய மதிப்பீட்டில் ரூ.1,676 கோடி குறைந்து வசூலான நிகர தொகை ரூ.1,39,708 கோடியாக இருந்தது. அதற்குப் பிறகு 2-வது முறையாக நவம்பர் மாதத்தில் ரூ.1.30 லட்சம் கோடியை ஜிஎஸ்டி வசூல் கடந்துள்ளது.
ஜிஎஸ்டி வசூல் தொகை ரூ.1.3 லட்சம் கோடியைக் கடந்துள்ளபோதிலும் இதில் ரிட்டர்ன் தொகை காலாண்டு முடிவில்தான்கணக்கிடப்பட்டு திருப்பித் தரப்படும். அப்போது வசூலான தொகை குறையும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வரி வசூல் அதிகரிப்பு பொருளாதாரம் மீண்டு வருவதன் அறிகுறி என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago