கால்பந்தின் கவுரமான விருதான பலோன் டி’ ஆர் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நகரில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரரான 34 வயதான லயோனஸ் மெஸ்ஸி சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. பலோன் டி’ ஆர் விருதை மெஸ்ஸி வெல்வது இது 7-வது முறையாகும். இதற்கு முன்னர் 2009, 2010, 2011, 2012 மற்றும் 2015-ம் ஆண்டுகளிலும் அவர் விருதை பெற்றிருந்தார்.
இம்முறை விருதுக்கான இறுதித் தேர்வு வாக்களிப்பின் போது மெஸ்ஸிக்கு வலுவான போட்டியாளராக போலந்து நாட்டின் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி திகழ்ந்தார். இவர்களுக்கு அடுத்த இடங்களில் ஜோர்ஜின்ஹோ, கரீம் பென்சிமா, என்'கோலோ காண்டே, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இருந்தனர்.
பார்சிலோனா கால்பந்து கிளப்புடன் தனது கால்பந்து வாழ்க்கையை தொடங்கிய மெஸ்ஸி கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த அணியில் இருந்து விலகி பிரான்ஸில் உள்ள பிஎஸ்ஜி அணியில் இணைந்திருந்தார். மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இந்த ஆண்டில் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. பார்சிலோனா கிளப்பில் மெஸ்ஸி தனது இறுதி சீசனில் 48 ஆட்டங்களில் 38 கோல்கள் அடித்திருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago