நாட்டிலேயே முதல் முறையாக ட்ரோன்கள் மூலம் கரோனா தடுப்பூசி மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை விநியோகிக்கும் திட்டம் காஷ்மீரில் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அறிவியல் மற்றும்தொழில் ஆராய்ச்சி கவுன்சிலுக்குசொந்தமான பெங்களூரு நிறுவனத்தில் ஆக்டோகாப்டர் என்ற ட்ரோன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை ட்ரோன்கள் கரோனா தடுப்பூசி மற்றும் இதர உயிர்காக்கும் மருந்துகளை போக்குவரத்து வசதி குறைவாக உள்ள பகுதிகளுக்கு விநி யோகிக்கும் பணியில் ஈடுபடும். இதன்படி முதல் முறையாக 50 குப்பிகள் கொண்ட தடுப்பூசிகளை காஷ்மீரின் சர்வதேச எல்லை அருகே உள்ள மார் பகுதியில் விநியோகம் செய்தது. இந்த ட்ரோன்கள் அமைதியின் தூதுவராக செயல்படுகிறது.
ஆனால், பாகிஸ்தானோ எல்லையில் அமைதியை சீர்குலைப் பதற்காக ட்ரோன்களை பயன் படுத்துகிறது. குறிப்பாக தீவிரவாதத்தைப் பரப்புவதற்காக வெடிபொருட்களை விநியோகிக்கும் பணியில் ட்ரோன்களை ஈடுபடுத்துகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago