தாய்லாந்தில் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கியுள்ள குரங்கு திருவிழாவை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அந்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
தாய்லாந்தில் உள்ள லோப்புரி மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் குரங்குகள் வசித்து வருகின்றன. இதனால் அந்த மாகாணத்திற்கு குரங்கு மாகாணம் என்ற பெயரும் உண்டு. இங்கு ஆண்டுதோறும் நவம்பர் இறுதியில் குரங்கு திருவிழா நடைபெறுவது வழக்கம். சுமார் 2 வாரங்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் குரங்குகளுக்கு பிடித்தமான பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்களும், சுற்றுலாப் பயணிகளும் வழங்குவர்.
இதனிடையே, கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் குரங்கு திருவிழா தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் பல வகையான குரங்குகளை காண்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் லோப்புரிக்கு வருகை தருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago