இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 296 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
கான்பூர் கிரீன்பார்க் மைதானத் தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளை யாடிய நியூஸிலாந்து 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்தது. டாம் லேதம் 50, வில் யங் 75 ரன்களுடன் நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 151 ரன்கள் குவித்த இந்த ஜோடியை அஸ்வின் பிரித்தார். வில் யங் 214 பந்துகளில், 15 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து வெளி யேறினார். பின்னர் களமிறங்கிய கேன் வில்லியம்சன் 18 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
ராஸ் டெய்லர் 11, ஹென்றி நிக்கோல்ஸ் 2 ரன்களில் அக்சர் படேல் பந்தில் நடையை கட்டினர். டாம் லேதம் 282 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 95 ரன்களில் அக்சர் படேல் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். ராச்சின் ரவீந்திரா 13, டாம் பிளெண்டல் 13, டிம் சவுதி 5, கைல் ஜேமிசன் 23, வில்லியம் சோமர்வில் 6 ரன்களில் வெளியேற நியூஸிலாந்து 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்திய அணி சார்பில் அக்சர் படேல் 5, அஸ்வின் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 59 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஆட்டத்தின் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago