குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியில், கடந்த 2002-ம் ஆண்டு பிப். 27-ம் தேதி சபர்மதி விரைவு ரயிலை ஒரு கும்பல் தீயிட்டு கொளுத்தியது. இந்த விபத்தில் 59 ராம பக்தர்கள் உயிரிழந்தனர்.
இது தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ஹாஜி பிலால் சுஜேலா (61) உள்ளிட்ட 11 பேருக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. வடோதரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுஜேலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 3ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர் எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந் தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுஜேலா நேற்று முன்தினம் உயிரிழந்துவிட்டதாக காவல் துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago