உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருவதை ஒட்டி, அந்நகரை ஒருசுற்றுலா தலமாக மாற்றும் நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து அயோத்தி வரை செல்லும் ராம்பாத் யாத்ரா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) நேற்று தொடங்கி வைத்தது.
இந்த ரயிலானது கடவுள் ராமருடன் தொடர்புடைய பகுதிகளான நந்திகிராம், ஷ்ரிங்வெர்பூர், வாரணாசி, பிரயாக்ராஜ், சித்ரகூட் ஆகிய இடங்களுக்கு சென்று கடைசியாக அயோத்தியை சென்றடையும். ராம யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக இந்த ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago