இங்கிலாந்தில் சட்டவிரோத நடவடிக்கை - சீக்கிய தீவிரவாத அமைப்பின் அலுவலகத்தில் சோதனை :

By செய்திப்பிரிவு

இங்கிலாந்தில் உள்ள நீதிக்கான சீக்கியர்கள் என்ற இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பின் அலுவலகத்தில் இங்கிலாந்து போலீஸார் சோதனை நடத்தினர்.

காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி இங்கிலாந்தில் இருந்து நீதிக்கான சீக்கியர்கள் என்ற அமைப்பு செயல்படுகிறது. பஞ்சாபில் பிரிவினைவாதத்தை தூண்டிவிடும் இந்த அமைப்பை இந்தியா கடந்த 2019-ம் ஆண்டு தடை செய்தது.

ஆனால், இங்கிலாந்தில் இந்த அமைப்பு தடை செய்யப் படவில்லை. லண்டனின் மேற்கு பகுதியில் ஹவுன்ஸ்லோ என்ற நகரில் நீதிக்கான சீக்கியர் அமைப் பின் அலுவலகம் செயல்படுகிறது. பஞ்சாப் தனிநாடு கருத்துக் கணிப்பு என்ற பெயரில் இந்த அமைப்பு சார்பில் போலியான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது அம்பலமாகியுள்ளது.

ஹவுன்ஸ்லோ அலுவலகத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக இங்கிலாந்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததைடுத்து, கடந்த 15-ம் தேதி அந்த அலுவலகத்தில் போலீஸார் சோதனை நடத்தினர்.

இதில், நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு போலியான கருத்துக் கணிப்பு நடத்தியிருப்பதும் வாக்கு எண்ணிக்கையை உயர்த்திக் காட்டுவதற்காக மின்னணு கருவிகள் மூலம் போலியான அடையாள அட்டைகள் தயாரித் திருப்பதும் தெரிய வந்தது. மின்னணு கருவிகள் மற்றும் ஆவணங்களை நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் அலுவலகத்தில் இருந்து இங்கிலாந்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும், பாகிஸ்தானுடன் தொடர்புடைய ஒருவரை போலீ ஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதில் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவிக் கும்படி கனடா அரசை இந்தியதேசிய புலனாய்வு நிறுவனம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத் தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்