பொருளாதாரத்தில் பின்தங்கியோர் இட ஒதுக்கீடு பெற - ரூ.8 லட்சமாக உள்ள வருவாய் உச்ச வரம்பை மறு பரிசீலனை செய்ய மத்திய அரசு முடிவு :

By செய்திப்பிரிவு

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்களுக்கு (இடபிள்யுஎஸ்) கல்வி, அரசு வேலை வாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்தது. இதன்படி, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சிலர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். இடபிள்யுஎஸ் பிரிவில் இட ஒதுக்கீடு பெறுவதற்கான வருவாய் உச்ச வரம்பை உயர்த்த உத்தரவிட வேண்டும் என கோரி உள்ளனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்த தடை விதித்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த் மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இடபிள்யூஎஸ் பிரிவினருக்கான வருவாய் உச்ச வரம்பை மறு ஆய்வு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்படும். இறுதி முடிவு எடுக்க ஒரு மாதம் அவகாசம் வேண்டும். இதற்கேற்ப மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மேலும் 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்