கரோனா பரவலிலிருந்து மக்களைப் பாதுகாக்க தடுப்பூசி செலுத்தும் பணியில் உலக நாடுகள் மும்முரமாக உள்ளன. இந்தியாவும் அதன் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதத்தினரான 18 வயதுக்கு மேற்பட்ட 94.5 கோடி மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தும் இலக்கை முன்னெடுத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த முயற்சியில் 66.7 கோடி தடுப்பூசிகளை வாங்குவதற்காக இந்திய அரசுக்கு 1.5 பில்லியன் டாலர் (ரூ.11,175 கோடி) கடன்வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தடுப்பூசிகள் 31.7 கோடி மக்களுக்குச் செலுத்தப்படும். இந்தக் கடன் ஆசிய பசிபிக் பிராந்தியத்துக்கான தடுப்பூசி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 9 பில்லியன் டாலரிலிருந்து வழங்கப்பட உள்ளது. மேலும் தடுப்பூசி கொள்முதலுக்காக கூடுதலாக ரூ.3,725 கோடியை ஆசிய வளர்ச்சி வங்கி வழங்கும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தியா இதுவரை 119 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட 94.5 கோடி பேரில் 82 சதவீதத்தினருக்கு முதல் டோஸும், 44% பேருக்கு 2-ம் டோஸும் செலுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago