காஞ்சிபுரத்தில் தகவல் மையம் - லார்சன் அண்ட் டூப்ரோ தமிழக அரசுடன் ஒப்பந்தம் :

By செய்திப்பிரிவு

லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் காஞ்சிபுரத்தில் மிகப் பெரிய தகவல் மையத்தை (டேட்டா சென்டர்) உருவாக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இது 90 மெகாவாட் திறன் கொண்டதாகும். இது சார்ந்த பிற யூனிட்டுகளும் இங்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்படுத்தப்படும். இதனால் 1,100 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதில் 600 பேர் நேரடி வேலைவாய்ப்பையும், 500 பேர் மறைமுகவேலைவாய்ப்பையும் பெறுவர்என நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்தது தொடர்பான அறிக்கையை மும்பை பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த கடிதத்தில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த மையம் அமைப்பதற்குத் தேவையான தடையற்ற மின்சாரத்தை தமிழக அரசு வழங்கும். அத்துடன் மையம் அமைப்பதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளையும் செய்து தரும்.

தமிழக அரசு தற்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறி வருகிறது. தமிழ கத்தில் தகவல் தொகுப்பு மையம் உருவாக்குவதன் மூலம் மேலும் முதலீடுகள் அதிகரிக்கும். அத்துடன் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்று லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.என். சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் தொகுப்பு மையமானது அதிநவீனமானதாக அமையும். இதில் கிளவுட் நிர்வாக முறையிலான சைபர் பாதுகாப்புசேவை, டிஜிட்டல் பரிமாற்ற ஒருங்கிணைப்பு உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் கிடைக்கும். ஸ்திரமான வளர்ச்சிக்கு தங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க சிந்தனைகளை வழங்கும் என்று எல் அண்ட் டி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்