கொலை வழக்கில் 3 தீவிரவாதிகள் கைது :

By செய்திப்பிரிவு

மத்திய நகர் பகுதியில் சந்தீப் மாவா என்ற காஷ்மீர் பண்டிட் மொத்த விலை பழக்கடை வைத்துள்ளார். இதில் வேலை செய்து வந்த இப்ராஹிம் அகமது, கடந்த9-ம் தேதி காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக மஹாராஜ் கஞ்ச் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த தனிப்படை போலீஸார், நேற்று முன்தினம் 3 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “இப்ராஹிம் அகமது கொலை தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரித்தோம். அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். புல்வாமா மாவட்டம் லெல்ஹர் பகுதியைச் சேர்ந்த இவர்களுக்கு பாகிஸ்தானில் உள்ளதீவிரவாதிகளுடன் தொடர்புஇருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, ஒரு துப்பாக்கி, கையெறி குண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்