கேரளாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் இருக்கிறது நோக்குக் கூலி. ஆரம்பத்தில் தலைசுமையாக பொருட்களை தூக்கிச்செல்லும் தொழிலாளர்களால் சுமைக் கூலி என்றே வசூலிக்கப்பட்டது.
கேரளாவில் ஒருவர் தனக்கு சொந்தமான சரக்குகளை அவரது பணியாளர்களைக் கொண்டு ஏற்றி, இறக்கிவிட முடியாது. இதற்கு சுமை தூக்கும் தொழிலாளர்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என எழுதப்படாத சட்டத்தை தொழிற்சங்கங்களே வகுத்துக் கொண்டன. அப்படி தொழிலாளர்களை பயன்படுத்தாதவர்களிடம் ‘நோக்கு கூலி’ என்ற பெயரில் கட்டாயமாக கூலி வசூலிக்கத் தொடங்கினர்.
மற்றவர்கள் வேலை செய்வதை கண்குளிரப் பார்த்துவிட்டு, சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி வாங்கிச் செல்வதே நோக்குகூலி. அதிலும் பொருட்களை ஒருமுறை தொட்டுவிட்டால் ‘தொடு கூலி’ எனவும் தனியாக வசூலித்து விடுவார்கள். அவர்களைக்கொண்டே அந்தப் பணியைச் செய்தால் எவ்வளவு கூலி வாங்குவார்களோ, அதைவிடக் கூடுதலாக நோக்குக் கூலி வாங்குவதும், தராதவர்களைத் தாக்குவதும் இப்போதும் தொடர்கிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago