போலி ஆவணம் மூலம் ஏற்றுமதி வரி சலுகை - தொழிலதிபருக்கு 6 ஆண்டு சிறை ரூ.10.20 கோடி அபராதம் : மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

போலி ஆவணங்களை தாக்கல் செய்து ஏற்றுமதி வரிச் சலுகை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபருக்கு சிபிஐ சிறப்புநீதிமன்றம் ரூ.10.20 கோடி அபராத

மும், 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித் துள்ளது.

நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இந்த அளவுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு சுங்க வரியை திரும்பப் பெறும் சலுகையை வழங்குகிறது. இவ்விதம் வரியைத் திரும்பப் பெறுவதற்கு டிஇபிபி என்ற திட்டம் அமலில் உள்ளது.

கிருஷண் குமார் குப்தா என்ற தொழிலதிபர் இத்திட்டத்துக்கு போலியான ஆவணங்களை தாக்கல் செய்து வரிச் சலுகை பெற்றுள்ளார். 2003-ம்ஆண்டு நடைபெற்ற இந்த மோசடி தொடர்பான வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்யு வட்கோங்கர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு சலுகையைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக ரூ.10.20 கோடி அபராதமும், 6 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப் பளித்தார். இவருக்கு உதவியாக செயல்பட்ட சுதிர் பி. மண்டல் என்பவருக்கு ரூ.2 லட்சம் அபராதமும், 3 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இவர்களுக்கு உதவியாக இருந்த பாங்க் ஆப் இந்தியா பணியாளர்கள் வசந்த் எம் பார்கே (காசாளராக பணியாற்றியவர்), சுநீல் பி ஜாதவ் (காசாளர்- கிளர்க் ஆக பணியாற்றியவர்) ஆகிய இருவரும் 2002-ம் ஆண்டே பணியிலிருந்து நீக்கப்பட்டனர். இவர்கள் இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதமும், ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் அறிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தற் போது ஜாமீனில் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்