ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்களிடம் சுற்றுலாவைஊக்குவிக்கவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் ‘பாரத் கவுரவ்’ என்ற பெயரில் ரயில்கள் இயக்கப்படும். இவை நமது கலாச்சாரம், பாரம்பரியத்தை விளக்கும் வகையில் நாடு முழுவதும் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும். இவை தினசரி இயக்கப்படும் ரயில்கள் அல்ல. குறிப்பிட்ட கால அட்டவணைப்படி இயக்கப்படும். ‘பாரத் கவுரவ்’ திட்டத்துக்காக 190 ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐஆர்சிடிசி மற்றும் தனியார் மூலம் இந்த ரயில்கள் இயக்கப்படும். இந்தரயில்களில் நியாயமான கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago