எரிபொருள் விலையை கட்டுப்படுத்த - கையிருப்பிலிருந்து 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் விடுவிக்க முடிவு :

By செய்திப்பிரிவு

பெட்ரோல, டீசல் விலையைக் கட்டுப்படுத்த இந்திய அரசு அவசரகால தேவைக்காக வைத்துள்ள கையிருப்பிலிருந்து 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஓபெக் நாடுகளுடனான முரண்பாடுகளால் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தங்களின் அவசரகால கச்சா எண்ணெய் இருப்பைப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளன. அவற்றைத் தொடர்ந்து இந்தியாவும் கச்சா எண்ணெய் இருப்பை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்தியா அவசரகால தேவைக்காக 3.8 கோடி பேரல் கச்சா எண்ணெயை மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மூன்று இடங்களில் இருப்பு வைத்துள்ளது. இதிலிருந்து 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை அரசு விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளது.

கச்சா எண்ணெய் இருப்பு கிடங்குகளுடன் இணைப்பு உள்ள மங்களூர் ரிபைனரி மற்றும் பெட்ரோலியம் நிறுவனத்துக்கும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்கும் இந்த கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயின் விநியோக நடவடிக்கைகள் அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்