பங்குச் சந்தையில் தொடர்ந்து நான்காவது நாளாக கடுமையான சரிவு காணப்பட்டது.
வாரத்தின் முதல் நாளான நேற்று ஏற்பட்ட சரிவினால் முதலீட்டாளர்களுக்கு ரூ.7.86 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.
மும்பை பங்குச் சந்தை குறியீட் டெண் சென்செக்ஸ் 1,170 புள்ளிகள் சரிந்து 58,465 புள்ளிகளானது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 348 புள்ளிகள் சரிந்து நிப்டி குறியீட்டெண் 17,416 புள்ளிகளில் நிலை கொண்டது.
சவூதி அரேபியாவின் ஆராம்கோ நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு விலைகள் 4% வரை சரிந்தன. முதல் முறையாக பொதுப் பங்கு வெளியிட்ட பேடிஎம் நிறுவன பங்குகள் 13 சதவீத அளவுக்கு சரிந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago