ஒடிசாவில் 1,070 ஸ்மார்ட் பள்ளிகள் :

By செய்திப்பிரிவு

ஒடிசா முழுவதும் 4,630 அரசுஉயர்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளி களின் தரத்தை உயர்த்தி, மாணவர்களின் கல்வித் திறனை மேம் படுத்த முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன்படி மாநிலம் முழு வதும் ஸ்மார்ட் பள்ளிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் கணினி ஆய்வகம் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.

இதுகுறித்து உயர் அதிகாரிவி.கே.பாண்டியன் கூறும்போது,"மாநிலம் முழுவதும் முதல்கட்டமாக 30 மாவட்டங்களை சேர்ந்த1,075 பள்ளிகள், ஸ்மார்ட் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள் ளன. இதன்மூலம் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் மாறி வருகின்றன" என்றார். மேலும் ‘ஆதர்ஷ் வித்யாலயா' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் கீழ் செயல்படும் பள்ளிகளில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்