சையது முஷ்டாக் அலி கோப்பையை - 3-வது முறையாக வென்றது தமிழக அணி :

By செய்திப்பிரிவு

சையது முஷ்டாக் அலி டி 20 தொடரின் இறுதிப் போட்டியில் கர்நாடகாவுக்கு எதிராக கடைசி பந்தில் ஷாருக்கான் சிக்ஸர் விளாச தமிழக அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது.

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்செய்த கர்நாடகா 7 விக்கெட்கள் இழப்புக்கு 151 ரன்கள்குவித்தது. 152 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தமிழக அணிக்கு பிரதீக் ஜெயின் வீசிய கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஷாருக்கான், ஷாய் கிஷோர் களத்தில் இருந்தனர். முதல் பந்தில் ஷாய் கிஷோர் பவுண்டரி அடித்தார். அடுத்த 4 பந்துகளில் மேற்கொண்டு 7 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதில் 2 உதிரிகளும் அடங்கும்.

கடைசி பந்தில் 5 ரன்கள்தேவைப்பட்ட நிலையில்ஷாருக்கான், டீப் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு விளாச தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷாருக்கான் 15 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 33 ரன்கள் விளாசினார். ஷாய் கிஷோர் 6 ரன்கள் சேர்த்தார். முன்னதாக நாராணயன் ஜெகதீசன் 41,ஹரி நிஷாந்த் 23, விஜய் சங்கர்18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

சையது முஷ்டாக் அலிகோப்பையை தமிழக அணி வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2006 மற்றும் 2020-ம் ஆண்டும் தமிழக அணி கோப்பையை வென்றிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்