நடப்பு நிதி ஆண்டில் பட்ஜெட் மதிப்பீட்டைவிட அதிகமாக வரி வசூல் இருக்கும் என்று மத்திய வருவாய்த் துறைச் செயலர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.
நேரடி வரி வசூல் அக்டோபர் மாதம் வரை ரூ.6 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது தவிர மாதந்தோறும் சராசரியாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.15 லட்சம் கோடியாக உள்ளது. இவற்றைக் கணக்கிடும்போது நடப்பு நிதி ஆண்டில் வரி வசூல் 9.5 சதவீதம் அதிகரித்து ரூ.22.2 லட்சம் கோடி யாகும் என்று பட்ஜெட்டில் மதிப் பிடப்பட்டது. ஆனால் வரி வசூல் இதை தாண்டும் என்று கூறினார்.
பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி மற்றும் சமையல் எண்ணெய் மீதான சுங்க வரி குறைப்பு காரணமாக அரசுக்கு ரூ.80 ஆயிரம் கோடி வரி வருவாய்இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதை ஈடுகட்ட வரி வசூல் நடவடிக்கைகளை வருவாய்த் துறை அதிகரித் துள்ளது. நேரடி வரி வருமானத்தில் வரி ரீபண்ட் தொகை போக ரூ.6 லட்சம் கோடி வசூலாகியுள்ளது, நல்ல அறிகுறியாகும். இத்தகைய சூழலில் இது மேலும் அதிகரிப்ப தற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
நடப்பு நிதி ஆண்டில் வரி வசூல் தொகை ரூ.22.2 லட்சம் கோடியாக பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டது. முந்தைய நிதி ஆண்டில் ரூ.20.2 லட்சம் கோடி வசூலானது. - பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago