காஷ்மீர் காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
புல்வாமா மற்றும் தெற்கு காஷ்மீரின் பல பகுதிகளில் சமீபத்தில் கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய குழுக்கள் ரகசியமாக செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து, புல்வாமா மாவட்டம் லெல்ஹர் பகுதியைச் சேர்ந்த 5 பேரைகைது செய்துள்ளோம். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் உள்ளிட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்களிடம் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago