உள்நாட்டில் தயாரான போர்க்கப்பல் - ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பு :

By செய்திப்பிரிவு

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலான ஐஎன்எஸ்விசாகப்பட்டினம், இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

இந்திய கடற்படையில் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், ரோந்துகப்பல்கள் என 130 கப்பல்கள் உள்ளன. வரும் 2027-ம் ஆண்டுக்குள் கடற்படை கப்பல்களின் எண்ணிக்கையை 170 ஆக உயர்த்ததிட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் ஐஎன்எஸ்விசாகப்பட்டினம் போர்க்கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப் படுகிறது. மும்பையில் நடைபெறும் விழாவில் இந்த போர்க்கப்பல் கடற்படையில் சேர்க்கப்படுகிறது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விழாவுக்கு தலைமை வகிக்கிறார்.

மத்திய பாதுகாப்புத் துறையின் 15 பி திட்டத்தின் கீழ் 4 அதிநவீன போர்க்கப்பல்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. இதில் முதல் போர்க்கப்பலான ஐஎன்எஸ்விசாகப்பட்டினம் மும்பை கட்டுமான தளத்தில் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

7,400 டன் எடை கொண்டது

இதைத் தொடர்ந்தே அந்த போர்க்கப்பல் கடற்படையில் இணைகிறது. இது 7,400 டன் எடை கொண்டது. நிர்பய், பிரம்மோஸ், பாரக் உள்ளிட்ட அதிநவீனஏவுகணைகள், அதிநவீன ரேடார்கள் கப்பலில் பொருத்தப்பட் டுள்ளன. இதில் 2 ஹெலிகாப் டர்களை நிறுத்தி வைக்கும் வசதியும் உள்ளது. 50 அதிகாரி களும் 250 வீரர்களும் கப்பலில் பணியாற்ற உள்ளனர்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கி கப்பல் வரும் 28-ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இதுபிரான்ஸ் தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள் ளது. 1,775 டன் எடை கொண்டஇந்த நீர்மூழ்கியில், போர்க்கப் பல்களை தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் பொருத் தப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்