மியான்மர், வங்கதேசம், நேபாளம், ஈரான் ஆகிய 4 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை இந்தியா மீண்டும் ஏற்றுமதி செய்யத் தொடங்கி உள்ளது.
இந்தியாவில் கரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஜனவரி மாதம் முதல் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசியை இந்தியா ஏற்றுமதிசெய்தது. கோவாக்ஸ் திட்டத்தின்அடிப்படையிலும் நன்கொடையாகவும் பல நாடுகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் கரோனா 2-வது அலை அதிகரித்ததால் நமது தேவைக்காக தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கரோனா தாக்கம் குறைந்ததையடுத்து, சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை இந்தியா ஏற்றுமதி செய்யத் தொடங்கி உள்ளது. மியான்மர், வங்கதேசம், நேபாளம், ஈரான்ஆகிய 4 நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும்தொடங்கியுள்ளது. இதேபோல,ஆப்ரிக்க நாடுகள் மற்றும் இந்தோனேசியாவுக்கு தடுப்பூசிகள் இந்த வாரத்துக்குள் சென்றடையும் என்றும் தடுப்பூசிகள் தயாரிக்கும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. - பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago