பிஃபா : உலகக் கோப்பைக்கு : அர்ஜெண்டினா தகுதி :

By செய்திப்பிரிவு

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு அர்ஜெண்டினா அணி தகுதி பெற்றது.

கத்தாரில் வரும் 2022-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற உள்ளது. 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொள்ளும் இந்த திருவிழா நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அர்ஜெண்டினா - பிரேசில் அணிகள் மோதிய ஆட்டம் போர்டோ ரிகோவில் உள்ள சான் ஜுவான் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்ததன் மூலம் அர்ஜென்டினா அணி தென் அமெரிக்க நாடுகள் பிரிவில் 29 புள்ளிகளுடன் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. அந்த அணி 13 ஆட்டங்களில் இந்த புள்ளிகளை பெற்றுள்ளது. அர்ஜெண்டினா அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவது இது 13-வது முறையாகும். இதே பிரிவில் பிரேசில் ஏற்கெனவே முதல் அணியாக தகுதி பெற்றிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்