நாட்டில் உள்ள நதிகள் இணைப்புத் திட்டங்களுக்காக புதிய ஆணையத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டில்நதிகள் இணைப்புத் திட்டங்களுக்காக, தேசிய நதிகள் இணைப்பு ஆணையத்தை (National Interlinkingof Rivers Authority - NIRA) உருவாக்கு வதற்கான நடைமுறைகளை மத்தியஅரசு தொடங்கியுள்ளது. நதிகள்இணைப்பு திட்டங்களை திட்டமிடுதல், நிதி அளித்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கான சுதந்திரமான,தன்னாட்சி அமைப்பாக இது இருக்கும்.
இந்திய அரசு செயலாளர் அந்தஸ்து அதிகாரியின் தலைமையின் கீழ் இந்த ஆணையம் செயல்படும். தற்போதுள்ள தேசிய நீர் மேம்பாட்டு முகமைக்கு பதிலாக நதிகளை இணைக்கும் அனைத்து திட்டங்களுக்கும் ஒரே அமைப்பாக ஆணையம் செயல்படும்.
அண்டை நாடுகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் துறைகளை ‘நீரா’ ஆணையம் ஒருங்கிணைக்கும். நதிகள் இணைப்பு திட்டங்களின் கீழ்சுற்றுச்சூழல், வனவிலங்குகள் மற்றும்காடுகளின் அனுமதி மற்றும் அவற்றின்சட்ட அம்சங்கள் தொடர்பான பிரச்சினைகளிலும் இது அதிகாரங்களை கொண்டிருக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago