உ.பி. பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை இன்று திறப்பு :

By செய்திப்பிரிவு

உத்தர பிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரூ.22.500 கோடி செலவில் 340 கி.மீ. தொலைவுக்கு பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுல்தான்பூர் பகுதியில் 3.2 கி.மீ. தொலைவுக்கு விமான ஓடுபாதை அமைக்கப்பட்டிருக்கிறது.

விமானப் படையின் சி130ஜே ஹெர்குலிஸ் சரக்கு விமானத்தில் பயணிக்கும் பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக நிறுவப்பட்டுள்ள பூர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் இன்று தரையிறங்குகிறார். அப்போது இந்த சாலையை திறந்து வைக்கிறார். பின்னர் அவர் உரையாற்ற உள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளின் நெடுஞ்சாலைகளில் போர் விமானங்கள், விமானப் படையின் சரக்கு விமானங்கள் தரையிறங்க ஏதுவாக ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. போர் காலத்தை கருத்தில் கொண்டு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்