ராணுவ தளவாட கொள்முதல்: : 13 நிறுவனங்களுக்கு தடை : பாதுகாப்பு அமைச்சகம் முடிவு :

By செய்திப்பிரிவு

மத்திய பாதுகாப்பு அமைச்சகம், 13 நிறுவனங்களிடமிருந்து ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்வதை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிறுவனங்களிடமிருந்து ஆயுதங்களை வாங்குவது முற்றிலுமாக நிறுத்தப்படுவது மற்றும் மிகவும் அவசியமான தளவாடங்களை மட்டும் வாங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்தப் பட்டியலில் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மற்றும் அதன் தாய் நிறுவனமான லியோனார்டோ இடம்பெறவில்லை. இவ்விரு நிறுவனங்கள் மீதான தடையை கடந்த மாதம் நிபந்தனை அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சகம் விலக்கிக் கொண்டுள்ளது.

மொத்தம் 13 நிறுவனங்கள் மீது பாதுகாப்பு அமைச்சகம், தளவாடங்கள் கொள்முதலை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிறுவனங்களில் ஐடிஎஸ், மொரீஷியஸ், யுனிடெக் என்டர்பிரைசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கும். இதுதவிர இஸ்ரேல் மிலிட்டரி இண்டஸ்ட்ரீஸ், ரஷ்யாவின் கார்ப்பரேஷன் டிபென்ஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களை முற்றிலுமாக தடை செய்துள்ளது பாதுகாப்பு அமைச்சகம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்