மகாராஷ்டிரா என்கவுன்ட்டரில் - மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் மிலிந்த் பாபுராவ் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலிமாவட்டத்தில் தனோரா வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடந்த சனிக்கிழமையன்று காலை மாவோயிஸ்ட்களுக்கும் மகாராஷ்டிர போலீஸின் சி-60 சிறப்புப் படைக்கும் இடையே 10 மணி நேரத்துக்கும் மேலாக கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவர் மிலிந்த் பாபுராவ் டெல்டும்டே உட்பட 26 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இத்தகவலை கட்சிரோலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அங்கித் கோயல் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவர்களில் 6 பெண் தீவிரவாதிகளும் அடங்குவர். இந்த துப்பாக்கிச் சண்டையில் சிறப்பு போலீஸ் படையைச் சேர்ந்த 4 போலீஸார் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள் ளனர்.

கொல்லப்பட்ட மிலிந்த் பாபுராவ்டெல்டும்டே பல்வேறு குண்டு வெடிப்பு மற்றும் கொலை சம்பவங்களில் தொடர்புடையவர். இவரது தலைக்கு ரூ.50 லட்சம் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்துஅந்தப் பகுதியில் மாவோயிஸ்ட் கள் பதுங்கியிருக்கிறார்களா என்று போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்