விராட் கோலியின் குழந்தைக்கு மிரட்டல் விடுத்த பொறியாளர் கைது : மும்பை போலீஸார் தீவிர விசாரணை

By செய்திப்பிரிவு

மும்பை அணியின் கேப்டன் விராட்கோலி, அனுஷ்கா சர்மாவின் 9 மாத பெண் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஹைதராபாத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கைது செய்யப்பட்டார்.

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து இந்திய வீரர் முகமது ஷமியை அவரது மதம் சார்ந்து சமூக ஊடகங்களில் பலர் கடுமையாக விமர்சித்தனர். அதைக் கண்டித்த கேப்டன் விராட் கோலி, ஷமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து ட்விட்டரில் ஒருவர் கோலியின் 9 மாத பெண் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார். இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மிரட்டல் விடுத்த நபர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் சங்கராரெட்டியைச் சேர்ந்த 23 வயதான ராம் நாகேஷ் னிவாஸ் அகுபதினி என விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சங்கராரெட்டி நகருக்கு விரைந்த மும்பை போலீஸார், ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த ராம் நாகேஷை புதன்கிழமை அதிகாலை கைதுசெய்தனர். அவர் மீது ஐபிசி பிரிவு374(ஏ), 506, 500 தகவல்தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67மற்றும் 67(பி) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தற்போது மும்பை சிறையில்அடைக்கப்பட்டுள்ள ராம் நாகேஷ் னிவாஸ் அகுபதினி, ஹைதராபாத் ஐஐடியில் கடந்த2019-ம் ஆண்டு இளநிலை பொறியியல் படித்து முடித்துள்ளார். அவர் பெங்களூருவில் உள்ள ஒரு முக்கிய உணவு டெலிவரி செயலியில் பணிபுரிந்து வந்துள்ளார். மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்வதற்காக அவர் சமீபத்தில் வேலையை ராஜினாமா செய்தது தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்