நாடு முழுவதும் கரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. விரைவில் 100 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக ‘ஹர் கர் தஸ்தக்’ என்ற பெயரில் வீடு வீடாகச் சென்று சுகாதாரப் பணியாளர்கள் மூலம் தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2-ம் தேதி அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்துகிறார். அப்போது, வீடு வீடாக தடுப்பூசி போடப்படும் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? அத்திட்டத்தை விரைவாக செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கை விரைவில் அடைய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மன்சுக் மாண்டவியா நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் அதற்கான வழிவகைகள் ஆராயப்பட்டு அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago