ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்துகிறது.
பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சூப்பர் 12 சுற்றில் 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டிருந்தது. இந்தத் தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஒரே அணியாக பாகிஸ்தான் வலம் வருகிறது. அதேவேளையில் 'குரூப் ஆப் டெத்' பிரிவில் இடம் பெற்றிருந்த ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா ஒரு ஆட்டத்தில் மட்டும் தோல்வி கண்டிருந்தது.
ஆஸ்திரேலியாவை பொறுத்தவரையில் பேட்டிங்கில் டேவிட் வார்னர் பார்முக்கு திரும்பி உள்ளது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது. அவருக்கு உறுதுணையாக மிட்செல் மார்ஷும் அதிரடியாக விளையாடி வருகிறார். பாகிஸ்தானின் பேட்டிங்கில் மொகமது ரிஸ்வான், பாபர் அஸம் தொடக்க ஜோடி வலுவாக உள்ளது. ஷோயிப் மாலிக், மொகமது ஹபீஸ் ஆகியோரும் பலம் சேர்ப்பதாக உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago