உலக சாதனை படைத்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி : 16.70 கோடி ரசிகர்கள் கண்டுகளித்ததாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தகவல்

By செய்திப்பிரிவு

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சூப்பர்-12 சுற்று ஆட்டம்தான் இதுவரை பார்க்கப்பட்ட சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளிலேயே மிகஅதிகபட்சம் என்று இந்தத் தொடரை ஒளிபரப்பு செய்து வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கூறியுள்ளது.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த மாதம் 24-ல் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளும் 2 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் மோதியதால், இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் மட்டுமின்றி, உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களாலும் இந்தப் போட்டி பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த போட்டியை 16.70 கோடி ரசிகர்கள் பார்த்துள்ளனர். இதன் மூலம் டி 20 போட்டிகளிலேயே அதிகமாக பார்த்து ரசிக்கப்பட்ட போட்டியாக இந்த ஆட்டம் அமைந்துள்ளது. இதற்கு முன் கடந்த 2016-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடரில் இ்ந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் மோதிய அரை இறுதி ஆட்டமே ரசிகர்களால் அதிகமாகப் பார்க்கப்பட்ட போட்டியாக இருந்தது.

அந்தப் போட்டியை 13.60 கோடி ரசிகர்கள் கண்டுகளித்திருந்தனர். அந்த சாதனையை தற்போது இந்தியா - பாகிஸ்தான் போட்டிமுறியடித்துள்ளது என ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை

இன்றைய ஆட்டம்இங்கிலாந்து - நியூஸிலாந்து

நேரம்: இரவு 7.30 இடம்: அபுதாபிநேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்