சத்தீஸ்கரில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து மாவோயிஸ்ட்களை ஒடுக்க அம்மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் பணியமர்த் தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இம்மாவட்டத்தின் லிங்காலபள்ளி கிராமத்தில் உள்ள சிஆர்பிஎப் அமைப்பின் 50-வது படை முகாமில் தங்கியுள்ள வீரர் ரீத்தேஷ் ரஞ்சன் நேற்று அதிகாலையில் தனது ஏகே-47 ரக துப்பாக்கியால் சக வீரர்களை நோக்கி திடீரென கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த 7 பேரை யும், அருகில் உள்ள தெலங்கானா மாநிலம் பத்ராச்சலம் நகர அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், 4 பேர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மற்ற 3 பேரில் 2 பேரை விமானம்மூலம் அழைத்துச் சென்று சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் ஒருவருக்கு பத்ராசலம் மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர்.
இதனிடையே, துப்பாக்கியால் சுட்ட வீரர் ரீத்தேஷை போலீஸார் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சிஆர்பிஎப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “இந்த சம்பவம் நடந்த இடத்தில் சிஆர்பிஎப் டிஐஜி, 50-வது படைத் தளபதி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இந்த விவகாரம் குறித்து உள்ளூர்போலீஸார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கியால் சுட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, இந்த சம்பவம் குறித்துஉள் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மன அழுத்தம் காரணமாக அந்த வீரர் இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காயமடைந்த வர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது” என்றார்.- பிடிஐ
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago