இந்திய பெருங்கடல் பகுதி நாடுகள் - ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் : வெளியுறவுத் துறை செயலர் கருத்து

By செய்திப்பிரிவு

இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யவும், வளர்ந்து வரும் புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், தொடர்புடைய நாடுகளின் கப்பற்படை எத்தகையப் பங்கை ஆற்ற வேண்டும் என்பதுகுறித்த மாநாடு கோவா மாநிலம்பனாஜியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா பேசியதாவது:

இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒரு புதிய ஒருங்கிணைந்த பொதுவான கட்டமைப்பை சம்பந்தப்பட்ட நாடுகள் உருவாக்க வேண்டும். கரோனா பாதிப்பும், பல்வேறு புதிய அச்சுறுத்தல்களும் உருவாகியுள்ள நிலையில் இந்த நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை அவை உணர்த்தியுள்ளன.

இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் உள்ள நாடுகளின் பாதுகாப்பும் வளர்ச்சியும், சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள் ளன. இதை மேலும் வலுப்படுத்தவும், வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தவும் பொதுவான கடற்பகுதிக்கான புதிய ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

கப்பற்படை, கடலோர காவல் படை மற்றும் கடல் பாதுகாப்பு ஏஜென்சிகள் எதிர்பாராத புதிய அச்சுறுத்தல்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும். இதன்படி இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் உள்ள நாடுகள்தங்களின் கட்டமைப்பு, புரிதல்,நடைமுறைகள் மற்றும் ஆதாரங்களை வலுப்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த ஒத்துழைப்பின் மூலம் அச்சுறுத்தல்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

இவ்வாறு ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறினார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்