சென்செக்ஸ் 478 புள்ளிகள் உயர்வு :

By செய்திப்பிரிவு

வாரத்தின் முதல் நாளான நேற்றுபங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது. வர்த்தகம் தொடங்கியபோது ஏற்ற, இறக்கம் நிலவியபோதிலும் வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டெண் சென்செக்ஸ் 480 புள்ளிகள் உயர்ந்து 60,545 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 151 புள்ளிகள் உயர்ந்து 18,068 புள்ளிகளானது.

டைட்டன் நிறுவன பங்குகள் அதிக அளவாக 4 % உயர்ந்தது. இதைத் தொடர்ந்து அல்ட்ரா டெக் சிமென்ட், பஜாஜ் பின்செர்வ், டெக் மஹிந்தரா, கோடக் வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி பங்குகள் விலை உயர்ந்தன. அதேநேரம் இண்டஸ் இந்த் வங்கி பங்குகள் அதிக அளவாக 10 சதவீதம் சரிந்தது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், டிசிஎஸ் ஆகிய நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்