இசை நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி : 8 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

அமெரிக்காவின் டெக்சாஸ்மாகாணம் ஹூஸ்டன் நகரில்நேற்று முன்தினம் பிரபல ராப்பாடகர் டிராவிஸ் ஸ்காட்டின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் காண சுமார் 50ஆயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

அப்போது பாடிக் கொண்டிருந்த ஸ்காட்டை பார்க்க மேடையை நோக்கி ரசிகர்கள் பலர் முண்டியடித்துக் கொண்டு முன்னேறினர். இதனால் அப்போது நெரிசல் ஏற்பட்டு பலர்கீழே விழுந்தனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து ரசிகர்களைக் கலைத்தனர். பின்னர் நெரிசலில் சிக்கி காயமடைந்த 17 பேரை போலீஸார்மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 8 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்