லண்டனில் சமீபத்தில் வாங்கிய ஸ்டோக் பார்க் எஸ்டேட்டில் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் குடியேற மாட்டார்கள் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறு வனம் (ஆர்ஐஎல்) விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
முகேஷ் அம்பானி குடும்பத் தினர் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க் எஸ்டேட்டுக்கு குடிபெயர திட்டமிட்டுள்ளதாக தேவையற்ற, அடிப்படை ஆதாரமில்லாத யூகங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
எனவே, இதுகுறித்த விவரங் களை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆர்ஐஎல் தலைவரோ அவரது குடும்பத்தினரோ லண்டனுக்குக் குடிபெயரும் திட்டத்தில் இல்லை.
மேலும் ஆர்ஐஎல் குழுமம், இந்த சொத்தை சமீபத்தில் கையகப்படுத்திய ஆர்ஐஹெச்எல் ஆகியவற்றுக்கு இது தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மிகவும்பாரம்பரியம் மிக்க இந்த சொத்தைவாங்கியதோடு அதை உலகின்பிரபலமான கோல்ஃப் மைதானமாக மாற்ற உத்தேசிக்கப்பட் டுள்ளது. இதன் மூலம் மிகச் சிறந்த விளையாட்டு ரிசார்ட்டாக மாற்றும் திட்டம் உள்ளது. உள்ளூர் வரைமுறைகள், சட்ட திட்டங்களுக்கேற்ப இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலாத் துறையை சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்காக இந்த பங்களா வாங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago