சீனாவின் வூஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2020-ம் ஆண்டு வூஹான் நகரில் பெண் பத்திரிகையாளர் ஜாங் ஜான் (38), கரோனா பரவலை சீன அரசு கையாளும் விதம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதையடுத்து மக்களிடம் பீதியை ஏற்படுத்துவதாகக் கூறிஅவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையைஎதிர்த்து சிறையில் ஜாங் ஜான்உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவருக்கு மூக்கு வழியேதிரவ உணவு செலுத்தப்படுகிறது. எனினும், ஜாங் ஜான் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago