தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. 8-ம் வகுப்புபயிலும் இவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை எழுதினார்.
அதில், கரோனா முதல் அலையை அடுத்து தங்கள் கிராமத்திற்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டு விட்டதால் பள்ளிக்கு சென்று வர சிரமமாக உள்ளதாகக் கூறியிருந்தார். மேலும், கரோனா தொற்றால் தனது தந்தை இறந்துவிட்டதால், பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட தங்களுக்கு ஆட்டோவில் செல்ல வசதி இல்லை எனவும் அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதத்தை பரிசீலித்த தலைமை நீதிபதிஎன்.வி. ரமணா, இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தெலங்கானா சாலைப் போக்குவரத்துக் கழகத்தை அறிவுறுத்தியிருந் தார். இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல்அந்த மாணவியின் கிராமத்திற்கு பேருந்து சேவை மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை தெலங்கானா சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக மேலாளர்வி.சி. சஜ்ஜனார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago