ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு 19 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சர்தார் முகமது தாவுத் கான் ராணுவ மருத்துவமனை உள்ளது. இதன் அருகே நேற்றுகாலை இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது.இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலை தலிபான்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். 19 பேரின் இறந்த உடல்கள் மற்றும் காயமடைந்த சுமார் 50 பேர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்தனர். ஐ.எஸ்.தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்