ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி 20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மொகமது ஷமியை சமூக வலைதளங்களில் மத ரீதியாக குறிவைத்து தாக்கத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து ஷமிக்கு ஆதரவாக கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ட்விட்டர் வாயிலாக விராட் கோலி, அனுஷ்கா சர்மா தம்பதியின் 9 மாத பெண் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி மகளிர் ஆணையம், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், வரும் 8-ம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரின் நகல், அடையாளம் காணப்பட்ட மற்றும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் விவரங்கள், கைது செய்யப்படவில்லை எனில் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங் களை தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே சர்ச்சைக்குரிய அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago