பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் ``மெட்டா'' என மாற்றப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றை வழங்கும் இந்நிறுவனத்தின் தாய் நிறுவன பெயர் நேற்று முதல் மெட்டா என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.
ஆனால், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் பெயர்கள் மாற்றப்படவில்லை. கடந்த காலங்களில் சமூக வலைதளங்களை செயல்படுத்தியதன் மூலம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். சமூக பிரச்சினைகளை அணுகிய விதத்தில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டோம். இவற்றையெல்லாம் படிப்பினையாகக் கொண்டு புதிய அத்தியாயம் படைப்போம் என்று ஆண்டுக் கூட்டத்தில் ஜூகர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago