பிஎப் சேமிப்புக்கு8.5 சதவீத வட்டி : நிதி அமைச்சகம் ஒப்புதல் :

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் தொழிலாளர் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன (இபிஎப்ஓ) அறங்காவலர்கள் குழு கூட்டத்தில் 2020-21 நிதி ஆண்டுக்கான பிஎஃப் சேமிப்புகளுக்கு 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஆயினும், பிஎஃப் வட்டி நடவடிக்கையைச் செயல்படுத்துவதற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலை தொழிலாளர் துறை அமைச்சகம் பெற வேண்டியிருந்தது. இதற்காக தொழிலாளர் துறை அதிகாரிகள் நிதி அமைச்சக அதிகாரிகளைச் சந்தித்து ஒப்புதல் வழங்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

தற்போது தீபாவளியைப் பண்டிகையை ஒட்டி மகிழ்ச்சியான செய்தியாக நிதி அமைச்சகம் 8.5 சதவீத வட்டிக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக இபிஎப்ஓ நிறுவனம் தெரிவித் துள்ளது.- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்