மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி : 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது

By செய்திப்பிரிவு

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் 1 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 7 விக்கெட்கள் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது.

143 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 22 ரன் தேவையாக இருந்தது. பிராவோ வீசிய 19-வது ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்த ஓவரின் கடைசி பந்தில் லிட்டன் தாஸ் ஆட்டமிழந்தார். அவர் 44 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அஃபிப், மஹ்மதுல்லா களத்தில் இருந்த னர். அந்த ஓவரை ஆந்த்ரே ரஸ்ஸல் வீசி 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

முடிவில் வங்கதேச அணி 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மஹ்ம துல்லா 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச அணிக்கு இது ஹாட்ரிக் தோல்வியாகும். இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை வங்கதேச அணி இழந்தது. அதேவேளையில் தனது முதல் இரு ஆட்டங்களில் தோல்வி யடைந்த மேற்கிந்தியத் தீவுகள் தற்போதைய வெற்றியின் மூலம் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப் பில் நீடிக்கிறது.

இன்றைய ஆட்டம்இலங்கை - தென் ஆப்பிரிக்கா

இடம்: ஷார்ஜா

நேரம்: பிற்பகல் 3.30

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து

இடம்: துபாய்

நேரம்: இரவு 7.30நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்