தாதா சாகேப் பால்கே விருது பெற்றதையடுத்து - குடியரசு தலைவர், பிரதமருடன் ரஜினி சந்திப்பு :

By செய்திப்பிரிவு

தாதா சாகேப் பால்கே விருது பெற்றதை அடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லி விஞ்ஞான் பவனில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், இந்திய திரைப்படத் துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இவ்விருதினை ரஜினிகாந்துக்கு வழங்கினார்.

இதன் மூலம் தாதா சாகேப் விருது பெறும் 51-வது திரைப்படக் கலைஞர் என்ற பெருமையை ரஜினிகாந்த் பெற்றார்.

இந்நிலையில், தாதா சாகேப் விருதினை பெற்றுக் கொண்டதை அடுத்து, டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை ரஜினிகாந்த் நேற்று தனது மனைவி லதாவுடன் தனித்தனியாக சந்தித்து பேசினார்.

பின்னர், இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரஜினிகாந்த், “குடியரசுத் தலைவர், பிரதமரிடம் இருந்து வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்