ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில், குரூப் 1-ல் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து அணி.
அபுதாபியில் நேற்று நடை பெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக முஸ்பிகுர் ரஹிம் 29, கேப்டன் மஹ்மதுல்லா 19, நசம் அகமது 19, நூருல் ஹசன் 16, மெஹதி ஹசன் 11 ரன்கள் சேர்த்தனர். லிட்டன் தாஸ் 9, மொகமது நயிம் 5, ஷகிப் அல் ஹசன் 4 ரன்களில் நடையை கட்டினர்.
இங்கிலாந்து சார்பில் டைமால் மில்ஸ் 3, லியாம் லிவிங்ஸ்டன் 2, மொயின் அலி 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
125 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 14.1 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரரான ஜேசன் ராய் 38 பந்துகளில் 61 ரன்கள் விளாசினார். ஜாஸ் பட்லர் 18, டேவிட் மலான் 28, ஜானி பேர்ஸ்டோ 8 ரன்கள் சேர்த்தனர். ஆட்ட நாயகனாக ஜேசன் ராய் தேர்வானார். இங்கிலாந்துக்கு இது 2-வது வெற்றி ஆகும்.
இன்றைய ஆட்டம்ஆஸ்திரேலியா - இலங்கை
இடம்: துபாய்
நேரம்: இரவு 7.30நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago