ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1ல் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி.
ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. மொகமது நயீம் 52 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 62 ரன்களும், முஸ்பிஹூர் ரஹிம் 37 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 57 ரன்களும் விளாசினர். லிட்டன் தாஸ் 16, ஷகிப் அல் ஹசன் 10, அஃபிப் ஹொஸைன் 7, கேப்டன் மஹ்மதுல்லா 10 ரன்கள் சேர்த்தனர்.
172 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாரித் அசலங்கா 49 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 80 ரன்களும் பனுகா ராஜபக்ச 31 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் விளாசினர். ஆட்ட நாயகனாக சாரித் அசலங்கா தேர்வானார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago